கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி |
தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'ஜவான்'. இப்படம் பற்றிய வசூல் விவரங்களை படம் வெளியான அடுத்த நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது படத் தயாரிப்பு நிறுவனம்.
அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி “சினிமா வரலாற்றில் அதிக மொத்த வசூலைக் குவித்த ஹிந்திப் படமாக உலக அளவில் 1143 கோடிய 59 லட்சம் வசூலித்துள்ளது. இந்தியா மொத்த வசூல் 757 கோடியே 62 லட்சம், வெளிநாடுகளில் 385 கோடியே 97 லட்சம்…. இந்தியா நிகர வசூல் 640 கோடியே 42 லட்சம், அதில் ஹிந்தி 580 கோடியே 9 லட்சம், மற்ற மொழிகளில் 60 கோடியே 33 லட்சம்,” என முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.
இதன்படி எடுத்துக் கொண்டால் இதற்கு முன்பு அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் ஹிந்திப் படமான 'டங்கல்' பட வசூலை முறியடித்துள்ளது. இருப்பினும், 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களுக்குப் பின்பே 'ஜவான்' வசூல் உள்ளது.