இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் |
கடந்த இரண்டு வருடங்களில் புட்டபொம்மா, அரபிக்குத்து பாடல்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்களை வசீகரித்தாலும், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கடந்த வருடம் தமிழில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் ராதே ஷ்யாம், ஆச்சார்யா மற்றும் ஹிந்தியில் சர்க்கஸ் என விதவிதமாக அவர் நடித்த படங்கள் வெளியானாலும் இந்த நான்கு படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த வருட துவக்கத்தில் சல்மான்கானுடன் இந்தியில் அவர் நடித்த கிஷிகா பாய் கிஷிகி ஜான் படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தான் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை இதன் படபிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார் பூஜா ஹெக்டே. இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், “பூஜா ஹெக்டேவை இந்த படத்தின் கதாநாயகியாக வரவேற்பதற்கும் அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்கும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.