'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ மீது பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் 2008ம் ஆண்டு பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். தனுஸ்ரீ பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறியதை தொடர்ந்து மீடூ புகாருக்கு ஆளான நடிகர்கள் சார்பில் ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் தனுஸ்ரீ மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தனுஸ்ரீ கூறும்போது “கடந்த 2008ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நானும், ராக்கி சாவந்தும் நடித்தோம். அப்போது எனக்கும், ராக்கி சாவந்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவரை தயாரிப்பாளர் நீக்கினார். அதன்பின் கடந்த 2018ம் ஆண்டு சிலர் மீது நான் 'மீடூ' புகார் அளித்தேன். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராக்கி சாவந்த், எனக்கு எதிராக பல்வேறு பாலியல் அவதூறுகளை பரப்பினார். அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.