மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பாலிவுட் நடிகை கங்கனா தனது துணிச்சல் மிகுந்த பேச்சால் ஹிந்தி திரையுலகிலும் சரி, மகாராஷ்டிரா அரசியலிலும் சரி மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு அரசியல் ரீதியாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் எம்.பியும் , அரசியல்வாதியுமான சுப்பிரமணிய சுவாமி, கங்கனா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து கிண்டலாக விமர்சித்துள்ளார். அப்படி இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக பதில் கொடுத்துள்ளார் கங்கனா.
இது குறித்து கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "நான் வெறும் நடிகை மட்டும் அல்ல. ஒரு இயக்குனர், தயாரிப்பாளரும் கூட. அதுமட்டுமல்ல விரைவில் வெளியாக இருக்கும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளேன். மகாராஷ்டிராவில் தேசியவாதிகள் அரசு அமைய வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மேலும் நான் தக்தே கும்பலை பற்றியும், காலிஸ்தான் அமைப்புகளை பற்றியும் கடுமையாக கண்டித்தேன். தற்போது உள்ள மலிவான அரசியல்வாதிகள் பலர் என்னை டார்கெட் செய்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதற்காகத்தான் எனக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.