லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பொதுவாக கேரக்டர்களுக்காக நடிகர்கள் எடை குறைப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் அதிகம் மெனக்கெட்டவர் விக்ரம். ஐ படத்திற்காக அவர் 25 கிலோ எடை குறைத்தார். இப்போது அவரையும் தாண்டி வீரசாவர்கர் கேரக்டரில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா 26 கிலோ எடை குறைத்துள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீர சாவர்கரின் வாழ்க்கை 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்கர்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகிறது. ரன்தீப் ஹூடா இயக்கி, சாவர்கராக நடிக்கிறார். இப்படத்தை ரன்தீப் ஹூடா பிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
படம் குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் பண்டிட் கூறியிருப்பதாவது: வீரசாவர்கர் கேரக்டருக்காக ரன்தீப் ஹூடா எல்லா வகையான கடின முயற்சிகளையும் மேற்கொண்டார். கடைசி வரை அந்த கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் மூழ்கியிருந்தார். படப்பிடிப்பு முடியும் வரை நான்கு மாத காலம் ஒரே ஒரு பேரிச்சம்பழமும், ஒரு கிளாஸ் பாலும் மட்டுமே உட்கொண்டு வந்தார். இதன் மூலம் 26 கிலோ எடையை குறைத்தார். சாவர்கரின் தோற்றம் வரவேண்டும் என்பதற்காக பாதி தலைக்கு மொட்டையடித்தார். அவரது உழைப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது. அதற்கான பலன்கள் அவருக்கு நிச்சயமாக கிடைக்கும் என்றார்.