‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படம் வெளியானது. இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது அவர் டைகர் 3 என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் சல்மான்கான். ஏற்கனவே சல்மான்கான் நடிப்பில் வெளியான ஏக்தா டைகர் மற்றும் டைகர் ஜிந்தகி ஆகிய படங்களைத் தொடர்ந்து டைகர் பட வரிசையில் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது இந்த டைகர் 3.
இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 2021லேயே துவங்கப்பட்டு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தடைபட்டு தற்போது மீண்டும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மனிஷ் ஷர்மா என்பவர் இயக்கிவரும் இந்த படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைப் நடிக்க, வில்லனாக இம்ரான் ஹாஸ்மி நடிகிறார். தற்போது படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக வித்தியாசமான வண்ணத்தில் தோளில் பேண்டேஜ் போடப்பட்டு படப்பிடிப்பில் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை சல்மான்கான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கிண்டலாக வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “உலகத்தையே உங்கள் தோள்களில் தூக்கி வைக்க நினைக்கிறீர்களா ? அவ்வளவு வேண்டாம்.. ஐந்து கிலோ தம்புள்ஸ் ஒன்றை தூக்கி காட்டுங்கள்.. புலிக்கு காயம்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.