ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இந்தியில் தற்போது சல்மான் கான் நடித்து வரும் படம் கிஸி கா பாய் கிஸி கி ஜான். முதலில் பைஜான் என டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்தப்படத்திற்கு தற்போது மேலே குறிப்பிட்ட டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தெலுங்கில் இருந்து நடிகர் வெங்கடேஷ் மற்றும் பூமிகா இருவரும் கூட ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். வெங்கடேஷின் தங்கையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் இருந்து பதுக்கம்மா என்கிற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
மணப்பெண் பார்க்க மாப்பிள்ளை வருவது போலவும் அவரை மணப்பெண் விட்டார் வரவேற்பது போலவும் முக்கால்வாசி பாடல் தெலுங்கிலும் கொஞ்சம் ஹிந்தியிலும் என கலந்து இந்த பாடல் உருவாகி உள்ளது. கேஜிஎப் படத்திற்கு இசையமைத்த ரவி பர்சூர் தான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த பாடலில் திருவிழா கோலம் பூண்டுள்ள தனது வீட்டில் பூஜா ஹெக்டே ஆடிப்பாடுவது போலவும் அப்போது வேட்டி சட்டையில் மணமகன் சல்மான்கான் தனது குடும்பத்தினருடன் சம்பந்தம் பேச என்ட்ரி கொடுப்பது போலவும் கிராமத்து பின்னணியில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.