தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பிரியங்கா சோப்ரா நடித்து வரும் பிரமாண்ட ஹாலிவுட் வெப் சீரீஸ் 'சிட்டாடல்'. அதிரடி ஆக்ஷன் தொடரான இது வருகிற ஏப்ரல் 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. முதல் நாள் இரண்டு எபிசோட்களும், அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தலா ஒரு எபிசோடும் வெளியாகிறது. இதில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
8 ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டுக்கொண்டிருந்த வலிமை மிக்க அதிகாரக் குழுவான மாண்டிகோர் சிட்டாடல் எனும் உலக புகழ்பெபற்ற உளவு நிறுவனத்தை அழித்து விடுகிறது. சிட்டாடல் உயர்நிலை உளவுத் துறை அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் (பிரியங்கா சோப்ரா) இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினாலும் கடந்த கால நினைவுகள் முற்றிலுமாகத் அவர்களுக்கு மறந்து விடுகிறது. தங்கள் கடந்த காலத்தை பற்றி எதுவும் அறியாதவர்களாக, புதிய அடையாளங்களோடு ஒரு புதிய வாழ்கை வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த நேரத்தில் ஒரு நாள் இரவு அவர்களின் கடந்த காலம் பற்றி தெரிய வருகிறது. தங்களை அழித்தவர்களை அழிக்க புறப்படுகிறார்கள். இந்த முறை அவர்கள் வென்றார்களா என்பதுதான் தொடரின் கதை. இந்த தொடர் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் பிரியங்கா சோப்ரா நடிக்கும் கேரக்டரில் சமந்தா நடித்து வருகிறார்.