ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். தற்போது செல்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் நாளை(பிப்., 24) வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடந்தது. இந்த படத்தின் ஒருபகுதியாக ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அக்ஷய். அதாவது மூன்று நிமிடத்தில் 184 செல்பி எடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அக்ஷய் கூறுகையில், ‛‛இந்த தருணம் வரை நான் இதுவரை சாதித்த அனைத்து விஷயங்களிலும், எல்லா இடங்களிலும் என் உடன் இருப்பது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவே காரணம். இது அவர்களுக்கான என் சிறப்பு பரிசு. அனைவருக்கும் நன்றி. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.