துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. தொடர்ந்து செக்கச்சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ள அதிதி ராவ், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடித்திருந்தார் அதிதி ராவ். அந்த சமயத்தில் சித்தார்த்தும் இவரும் நட்பாக பழக ஆரம்பித்து காதலில் விழுந்தனர் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பொது நிகழ்ச்சிகள் சிலவற்றில் இருவரும் ஜோடியாக கூட கலந்து கொண்டனர்.
அதனால் இந்த காதலர் தினத்தன்று இவர்கள் தங்களது காதலை வெளிப்படையாக அறிவிப்பார்கள் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிதி ராவ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சித்தார்த்துக்கும் ஒரு சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு தான் ரோஜா கொடுத்து புரபோஸ் பண்ணுவது போன்று புகைப்படத்தை வெளியிட்டு 'என்னுடைய சர்ரியல் காதலர் தினம்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சித்தார்த் ஹார்ட் எமோஜியை பதிலாக பதிவிட்டுள்ளார். இந்தியில் பிரபலமான தாஜ் என்கிற ரியாலிட்டி ஷோவில் தர்மேந்திராவுடன் கலந்து கொண்டபோது இந்த புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார்.