பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், அஷுதோஷ் ரானா, டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடிக்கும் 'பதான்' ஹிந்திப் படம் நாளை(ஜன., 25) உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக நடந்து வருகிறது. முன்பதிவாக மட்டும் ரூ.20 கோடிக்கு டிக்கெட் புக்கிங் நடந்துள்ளது. அதில் 30 சதவீதம் தென்னிந்தியாவில் புக்கிங் நடந்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 50 கோடி வரை இருக்கும் என பாலிவுட்டினர் எதிர்பார்க்கின்றனர். இந்த வார இறுதி வசூலாக மட்டும் 200 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் 5000 மல்டிபிளக்ஸ் ஸ்கீரின்களில் இப்படம் வெளியாகிறது. அவற்றைத் தவிர்த்து சிங்கிள் ஸ்கீரின்களும் உண்டு. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாலிவுட் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இப்படத்தின் வெற்றி அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளிவர உள்ள 'ஜவான்' படத்திற்கு பெரும் பிளஸ் பாயின்டாக அமையப் போகிறது.