ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தி சினிமாக்கள்தான் கடந்த பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், கடந்த சில வருடங்களாக தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று அந்த ரசிகர்களின் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டன. அதன் காரணமாக, நேரடி ஹிந்திப் படங்களுக்கான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்த வருடம் ஹிந்தியில் ஒரு சில படங்கள்தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.
ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ரன்வீர் சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்த 'சர்க்கஸ்' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு ஹிந்தியில் வெளியானது. ஆனால், படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் சுமார் 7 கோடி வசூலும், இரண்டாவது நாளிலும் அதே அளவு வசூலையும் பெற்று மொத்தமாக 14 கோடி வசூலை மட்டுமே 'சர்க்கஸ்' பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லால் சிங் சத்தா, சாம்ராட் பிரித்திவிராஜ், ஷாம்ஷெரா, ராம் சேது' வரிசையில் இந்த 'சர்க்கஸ்' படமும் தோல்விப் படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் என்கிறார்கள். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'சர்க்கஸ்' படத்தின் வசூல் இப்படி ஆரம்பித்துள்ளது பாலிவுட்டில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.