தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? |
ஹிந்தியில் இந்த வருட துவக்கத்தில் வெளியாகி அரசியல் ரீதியாக மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். அபிஷேக் அகர்வால் தயாரித்திருந்த இந்த படத்தை இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி இயக்கியிருந்தார். மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் இந்த படம் பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்தடுத்த படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பயணிக்க இருக்கின்றனர்.
இந்தநிலையில் இவர்களது கூட்டணியில் புஷ்பா படத்தின் இயக்குனரான சுகுமாரும் கைகோர்த்துள்ளார். அது இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிப்பதற்காகவா அல்லது அந்தப் படத்தை இயக்குவதற்காகவா என்பது குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இவர்களது சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த தகவலை காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, “சுகுமார் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி என்கிற இரண்டு பிளாக்பஸ்டர் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.. இந்திய சினிமா எப்போதுமே ஒரே மாதிரி இருக்காது” என்று கூறியுள்ளார்.