ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் கைதி. இந்த படம் தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் ஹிந்தியில் போலா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை அஜய் தேவ்கனே இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை தபு நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் படம் முழுக்க பயணிக்கும் விதமாக நடித்திருந்த போலீஸ் அதிகாரியான நரேனின் கதாபாத்திரம்தான் ஹிந்தியில் பெண் கதாபாத்திரம் ஆக மாற்றப்பட்டு அதில் தான் தபு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் அமலாபால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமலாபால் ஹிந்தியில் முதன் முதலாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தபு இருக்கும் நிலையில், இன்னொரு கதாநாயகிக்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அமலாபாலுக்கு என்ன விதமான கதாபாத்திரம் இதில் கொடுக்கப்பட இருக்கிறது என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.