நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை |
தமிழ், தெலுங்கில் சில வருடங்கள் முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. கடந்த சில வருடங்களாக அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் வெற்றிப் படங்களில் நடித்தவர் தமன்னா.
தற்போது அவர் ஹிந்தியில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் நடித்துள்ள 'பப்லி பவுன்சர்' என்ற படம் இந்த வாரம் செப்டம்பர் 23ம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தை ஹிந்தியில் 'சாந்தினி பார், பேஜ் 3, கார்ப்பரேட், பேஷன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார். படம் பற்றியும், தமன்னா பற்றியும் அவர் சுவாரசியத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
“தமன்னா மிகவும் கடின உழைப்பாளி, திறமைசாலி. அவர் இதற்கு முன்பு நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. 'பாகுபலி' படத்தையும் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததால் ஞாபகமில்லை. ஒரு நடிகையைப் பார்க்கும் போது அவர் எனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பாரா என்றுதான் பார்ப்பேன். அப்படி தமன்னாவைப் பார்த்த போது அவர் எனது பப்லி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். நிஜ வாழ்க்கையில் நான் காமெடியான ஒரு மனிதன். ஆனால், 'சாந்தினி பார்' படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை 'டார்க் சினிமா' மட்டுமே எடுப்பேன் என நினைக்க ஆரம்பித்தார்கள். இந்தப் படத்தில் தமன்னா வந்ததும், நகைச்சுவைப் படமாக எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.