பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் | 'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் |
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான கத்ரினா கைப், விக்கி கவுஷல் திருமணம் டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்வாரா என்ற இடத்தில் உள்ளள தனியார் ரிசார்ட்டில் 'டெஸ்டினேஷன்' திருணமாக நடக்க உள்ளது.
மெஹந்தி உள்ளிட்ட திருமண நிகழ்வுகளை உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக நடத்த மணமக்கள் திட்டமிட்டுள்ளார்களாம். தன்னுடைய திருமண ஆடைகள் குறித்து டிரையல் பார்ப்பதற்காகக் கூட தன்னுடைய வீட்டைப் பயன்படுத்தாமல் தோழிகளின் வீட்டை கத்ரினா பயன்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள். பப்பராஸி புகைப்படக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடாம்.
கத்ரினாவை விட விக்கி ஐந்து வயது இளையவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. கடந்த சில வருடங்களாகவே இருவரும் காதலித்து வருகிறார்களாம். திருமணம் நடைபெற உள்ள அந்த ரிசார்ட்டில் மொத்தமாக ஐந்து நாட்களுக்கு வேறு எந்த விருந்தினர்களும் தங்க முடியாதபடி ஒட்டு மொத்தமாக மணமக்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
பாலிவுட்டில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி திருமணத்திற்குப் பிறகு இந்த ஜோடியின் திருமணம் பற்றித்தான் அதிகமான பேச்சுக்கள் உள்ளதாம். சமூக வலைத்தளங்களிலும் பாலிவுட் சினிமா ரசிகர்கள் காத்ரினா, விக்கி திருமணம் பற்றி பல்வேறு கமெண்ட்டுகள், மீம்ஸ்களை அள்ளித் தெளித்து வருகிறார்கள்.