ஆயிரமாவது பாடலை எழுதிய மதன் கார்க்கி | புலவர் பெருந்தலை சாத்தனாராக நடித்த கொட்டாச்சி | விஜயகாந்த் மகனுக்கு விஜய், லாரன்ஸ் உதவினார்களா? | ஒரே நேரத்தில் 5 படங்களா? : சிம்பு விளக்கம் அளிப்பாரா | இன்று ஸ்ரீலீலாவுக்கு பிறந்தநாள் : ரசிகர்கள் வாழ்த்து | தக் லைப் : ஓடிடி விலை, மறுபரிசீலனை பேச்சுவார்த்தை? | நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'ஹெலன்'. மாத்துக்குட்டி சேவியர் என்பவர் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். அன்னா பென் என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் தமிழ் ரீமேக்கில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்க, அன்பிற்கினியாள் என்கிற பெயரில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் இந்த வருடம் வெளியானது.
இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'மிலி'யில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹெலனை இயக்கிய மாத்துக்குட்டி சேவியரே ஹிந்தியிலும் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார் ஜான்வி கபூர். “இப்படிப்பட்ட அற்புதமான ஒரு இயக்குனருடன் இணைந்து பயணித்தது நல்ல அனுபவம்” என அவருக்கு நன்றி கூறியுள்ளார் ஜான்வி கபூர்.
அதேபோல மாத்துக்குட்டி சேவியரும், ஜான்வி கபூர் சிறப்பாக ஒத்துழைத்து நடித்ததை பாராட்டும் விதமாக, ‛‛நீங்கள் இல்லையென்றால் நான் ரொம்பவே கவலைப்பட்டு போயிருப்பேன்.. நீங்கள் எனக்காக செய்த எல்லாவற்றுக்கும் நன்றி.. இதை ஒருபோதும் மறக்க மாட்டேன் நன்றி'' என தெரிவித்துள்ளார்.