ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛83'. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் உலக கோப்பை வென்றதை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை நேற்று வெளியிட்டனர். இதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டரும் நிஜத்தில் உள்ள கேரக்டர்களை அப்படியே பரதிபலிக்கின்றன. அதிலும் கபில்தேவ்வாக நடித்துள்ள ரன்வீர் சிங், ஸ்ரீகாந்த்தாக நடித்துள்ள ஜீவாவின் கேரக்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக டிரைலரை வெளியிட்டுள்ளனர். மற்ற மொழிகளை காட்டிலும் ஹிந்தி பட டிரைலருக்கு 1.5 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. 83 படம் டிச.,24ல் 3டியில் இந்த படம் 5 மொழிகளில் வெளியாகிறது.