விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! | சூர்யா 45வது படத்தில் வில்லன் வேடத்தில் மன்சூர் அலிகான்! |
கடந்த 2005ல் ஹிந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பண்டி அவுர் பப்ளி. 15 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த அபிஷேக் பச்சனுக்கு பதிலாக இந்த இரண்டாவது பாகத்தில் சைப் அலிகான் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த பட டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த ஹீரோ மாற்றத்திற்கு காரணம் என்று பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே படத்தின் தயாரிப்பாளர் தூம் 3 படத்தை தயாரித்தபோது அதில் நடிப்பது தொடர்பாக அபிஷேக் பச்சனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது தற்போது வரை தீராததால் இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் அபிஷேக் பச்சனுக்கு பதிலாக சைப்பை மாற்றச் சொல்லி விட்டாராம் பட தயாரிப்பாளர்.