மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியவர். சமூகவலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான படங்களை பதிவிடும் இவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமாதானமாகி இணைந்தனர்.
இந்த நிலையில் பூனம் பாண்டே முகம் மற்றும் தலை, கண்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் கணவர் சாம் பாம்பே தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சாம் பாம்பே போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.