டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். அவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த மாதம் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து சிறையை விட்டு வெளியே வந்தார்.
அதேசமயம் வார இறுதியில் அவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் என்பது ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்று.. அந்தவகையில் சமீபத்தில் அவருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தனக்கு காய்ச்சல் என்றும் உடல்நிலை சரியில்லை என்றும் கூறி அந்த சம்மனை நிராகரித்து விட்டாராம் ஆர்யன் கான். அதேசமயம் அவருடன் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவரது நண்பன் அர்பாஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.