ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷாரூக்கான். அந்த வகையில் ஆரியன்கானின் ஜாமீன் மனு அக்டோபர் 8-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் 11ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஜாமீன் மனுவை நிராகரிக்க கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 20ம் தேதியான இன்று ஆரியன் கானின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரியன்கான் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து ஜாமீன் மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இப்படி பலமுறை ஆரியன்கானை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தும் தொடர்ந்து ஜாமீன் கிடைக்காததால் ஷாரூக்கான் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.