ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' |

'மேகா, கத்துக்குட்டி, ராஜாவுக்கு செக், காதலாகி, ஜித்தன் 2' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. சற்றே இடைவெளிவிட்டு அவர் நடிக்கும் படம் 'மகாசேனா'. தினேஷ் கலைசெல்வன் இயக்க, விமல் ஹீரோவாக நடிக்கிறார். யானை பின்னணியில் காந்தாரா மாதிரி, ஒரு தெய்வ சிலையை முக்கியமான கதையாகக்கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கூடலுார், வயநாடு, கர்நாடக வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முதன்முறையாக யானையுடன் துணிச்சலாக நடித்து இருக்கிறார் சிருஷ்டி. அவருக்கு சண்டைக்காட்சியும் இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, 14 வயது பெண்ணுக்கு அம்மாவாகவும் வருகிறார். முதலில் நடிக்க மறுத்தவர் கதை கேட்டு, தனது கேரக்டர் குறித்து இயக்குனர் அனுப்பிய ஓவியங்கள் பார்த்து விமல் மனைவியாக, அம்மாவாக நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். சேனா என்பது அந்த யானையின் பெயர் என்பதால் 'மகாசேனா' என்பது தலைப்பு. வனப்பகுதியில் நடிக்கும் ஆக்ஷன் திரில்லரான இந்த படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் டிசம்பர் 12ம் தேதி வெளியாகிறது.




