கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? | புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் | 'நாயகி' ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர் | மன வருத்ததுடன் பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பும் ராஷி கண்ணா ; காரணம் இதுதான் |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ்குந்த்ரா. ஆபாச படங்கள் தயாரித்து அதை விநியோகம் செய்து வந்த வழக்கில் இவரை மும்பை போலீசார் ஜூலை மாதம் 19ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து செப்டம்பர் 20ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா கடந்த 14ம் தேதி மும்பை ஜுஹு பகுதி காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ரா மீது புகார் அளித்தார். அவர்கள் தன்னை ஏமாற்றியதுடன், மனதளவில் பாலியல் தொல்லை தருவதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரை பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் 50 கோடி ரூபாய் கேட்டு ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் ஷெர்லின் சோப்ரா மீது மும்பை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். பொய்யான புகார் கூறி தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிறார்கள்.