பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு, தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி,பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் இந்தி படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக தமிழ் படங்களுக்கே இல்லாத வகையில் மொத்தமாக 20 நாட்களை ஒதுக்கி கொடுத்து ஷூட்டிங்கை முடித்து திரும்பியுள்ளார். இந்த படப்பிடிப்பில் ஷாருக் கானிடம் பேசிக்கொண்டு இருந்த யோகி பாபு தான் நடித்த மண்டேலா படத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். ஷாருக் கான் உடனே மண்டேலா பத்தின் முழு கதையையும் சொல்லி இந்த படத்தை ஓடிடியில் ஏற்கனவே பார்த்து விட்தாக சொல்லி ஆச்சர்யம் கொடுத்துள்ளார்.
சென்னை வந்த பிறகும் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஷாருக் பற்றி புகழ் பாடி வருகிறார் யோகிபாபு.