இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

வாசனை காமெடியன் பல ஆண்டுகளாக, 'ஹீரோ'வாக நடித்த போதும், இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால், புரோட்டா காமெடியனோ, இரண்டே படங்களில், 'ஹீரோ' மார்க்கெட்டை, 'ஸ்டெடி' பண்ணி விட்டார்.
இதனால், கடும் அதிர்ச்சியில் இருக்கும், வாசனை காமெடியன், இனிமேல், காமெடி கலந்த கதைகளில் நடிப்பதை தவிர்த்து, கருத்து சொல்லும் படங்களில் நடிக்க விரும்புகிறார்.
ஆனால், அவரது இந்த முடிவை பார்த்து, 'காமெடி, 'ஹீரோ'வான நீங்கள், கருத்து சொன்னால், அதை ரசிகர்கள் ஏற்பரா?' என, கேள்வி எழுப்பினர், சில இயக்குனர்கள்.
'புரோட்டா காமெடியன் சொல்லும் போது ஏற்கும், ரசிகர்கள், நான் சொல்லும் போது, ஏற்க மாட்டார்களா? நல்ல விஷயங்களை யார் சொன்னாலும், தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வர். எனக்கும், சமூகத்தை சீர்திருத்தக் கூடிய கதைகளை தயார் செய்யுங்கள்...' என, நட்பு வட்டார இயக்குனர்களை வலியுறுத்தி வருகிறார், வாசனை காமெடியன்.