சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவுதமி! | குழந்தைகள் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட விழிப்புணர்வு செய்தி! | சொர்க்கவாசலில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை | 'எனை சுடும் பனி': மீண்டும் ஒரு பொள்ளாச்சி கதை | 'ப்ரீடம் அட் மிட்நைட்': இன்று வெளியானது | பிளாஷ்பேக்: லைவ் சவுண்டில் உருவான 'தூரத்து இடி முழக்கம்' | யஷ், நயன்தாரா படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் | பிளாஷ்பேக்: அந்த காலத்து வாலிபர் சங்கம் | லக்கி பாஸ்கரை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீஸ்! | வெண்ணிலாவாக தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு |
2021ம் ஆண்டில் தமிழ் சினிமா பல இன்னல்களை சந்தித்தாலும் ஒட்டு மொத்தமாக தியேட்டர்கள், டிவி, ஓடிடி என 185 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் அதிக படங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்களை இங்கு பார்க்கலாம்.
நாயகன் - விஜய் சேதுபதி, சமுத்திரகனி.
சமுத்திரகனி, விஜய்சேதுபதி இருவரும் தலா 7 படங்களில் நடித்து 2021ல் அதிக படங்களில் நடித்தவர் ஆனார்கள்.
‛‛சங்கத்தலைவன், ஏலே, வெள்ளை யானை, விநோதயம் சித்தம், சித்திரை செவ்வானம், ரைட்டர், உடன்பிறப்பே'' என ஏழு படங்களில் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.
‛‛மாஸ்டர், குட்டி ஸ்டோரி, லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, முகிழ், நவரசா போன்ற படங்களில் விஜய்சேதுபதி நடித்திருந்தார்.
நாயகி - பிரியா பவானி சங்கர், ரெஜினா
நாயகிகளில் பிரியா பவானி சங்கர், ரெஜினா ஆகியோர் தலா நான்கு படங்களில் நடித்துள்ளனர்.
‛‛களத்தில் சந்திப்போம், கசடதபள, ஓ மணப்பெண்ணே, பிளட்மணி என நான்கு படங்களில் ப்ரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
ரெஜினா கசாண்ட்ரா, ‛சக்ரா, கசடதபற, முகிழ், நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற நான்கு படங்களில் நடித்திருந்தார்.
இசையமைப்பாளர்கள் - யுவன் ஷங்கர், சந்தோஷ் நாராயணன்
அதிக படங்களில் இசையமைத்தவர்களில் சந்தோஷ் நாராயணன், யுவன்சங்கர் ராஜா ஆகியோர் தலா ஏழு படங்களுக்கு இசையமைத்திருந்தனர்.
‛‛களத்தில் சந்திப்போம், சக்ரா, நெஞ்சம் மறப்பதில்லை, சுல்தான்(பின்னணி இசை), கதட தபற, டிக்கிலோனா, மாநாடு ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
‛‛பாரிஸ் ஜெயராஜ், கர்ணன், ஜெகமே தந்திரம், வெள்ளம் யானை, சார்பட்டா பரம்பரை, நவரசா, கசட தபற'' ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
காமெடியில் யோகி பாபு டாப்
காமெடியை பொருத்தமட்டில் நடிகர் யோகிபாபு அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் 2021ல் 15 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் மண்டேலா, பேய் மாமாவில் ஹீரோவாகவும், 13 படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார்.