நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
அழகு கொஞ்சி விளையாடும் பேரழகி... தமிழ் கொஞ்சி பேசும் மலையாள மொழியழகி.... ஆயிரம் ஆர்த்தங்கள் சொல்லும் ஆழப்பார்வை, பார்த்தாலே ஈர்க்கும் இதழ்வரிகளின் கோர்வை... என கவிபாட வைத்து, பொன்னியின் செல்வன்ல், பொன்னியின் செல்வியாக நடிப்பில் முத்திரை பதித்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மனம் திறக்கிறார்...
டாக்டர் பொண்ணு நடிகையானது...
டாக்டர் முடித்த பின் ஒரு காபி ஷாப்பில் நிவின் பாலி படத்திற்கு ஹீரோயின் தேவை என விளம்பரம் பார்த்து என் போட்டோ அனுப்பினேன். லுக் டெஸ்ட்டில் செலக்ட்டாகி நிவின் பாலிக்கு ஹீரோயினாக நடித்தேன். குடும்பத்தினருக்கும் நடிக்கிறது பிடிச்சிருக்கு.
நிவின் பாலி, பகத் பாசில், தனுஷ்...
பெரிய நடிகர்கள், இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அத்தனை பேரிடம் தினம் கற்றுக் கொள்கிறேன். குடும்பத்தினர் சினிமா துறையில் இல்லை. அதனால் எனக்கு இப்படி வாய்ப்புகள் கிடைப்பது கடவுள் ஆசிர்வாதம் தான்.
தமிழில் விஷாலின் ஆக் ஷன்க்கு பின்...
அந்த படத்திற்கு பின் தனுஷ் உடன் ஜகமே தந்திரம் நடித்தேன். இப்போது பொன்னியின் செல்வன்ல் நடிக்கிறேன் என் பக்கம் இடைவெளி இல்லை. ரிலீஸ் தான் தள்ளி போகுது.
ஐஸ்வர்யா எதிர்பார்க்கும் கேரக்டர்கள்
என்ன கேரக்டர்களாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கணும். நல்ல டீம், மக்கள் ரசிக்கும்படி நல்ல படம் அமையணும். ஆரம்பத்தில் இருந்தே நுணுக்கமான கேரக்டர்கள் தான் நடிக்கிறேன். அதில் கொஞ்சம் மாற்றம் கொண்டு வர நினைக்கிறேன்
தெலுங்கு படத்தில் அறிமுகம் குறித்து
தெலுங்கில் முதல் படம் காட்சே... சத்யா ஹீரோ, கோபி கணேஷ் இயக்குனர். இரண்டு பேரும் வெற்றி கூட்டணி. அடுத்த மாதம் இன்னொரு தெலுங்கு படம் ஆரம்பிக்கிறது. அது எமோஷனல் கதை.
பொன்னியின் செல்வன், மணிரத்னம் குழு
இயக்குனர் மணிரத்னம் பிடித்த நபர்களில் ஒருவர். செட்ல ஒரு ஜென்டில்மேன். என்ன வேணுமோ தெளிவாக நடிகர்களிடம் கேட்டு வாங்குவார். வெற்றி பெற்ற மனிதரா திரைத்துறையில் இத்தனை ஆண்டுகள் இருப்பது பெருமையான விஷயம்.
தமிழ் ரசிகர்களுக்கு நீங்க சொல்ல நினைப்பது
ஜகமே தந்திரம்ல் என் நடிப்பு, நான் பேசிய இலங்கை மொழியை நிறைய பேர் பாராட்டினாங்க. இன்று போல் என்றும் ரசிகர்கள் ஆதரவு கொடுக்கணும்னு கேட்டுக் கொள்கிறேன்.