வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

'விண்ணில் மிதந்த நிலா மண்ணில் பெண்ணானதோ... கார்மேக கூட்டம் கருங்கூந்தலானதோ...' என பாடத்தோன்றும் இவரை கண்டால்! 'பிப்டி கேஜி தாஜ்மகால்' என சோஷியல் மீடியாவில் இவரை வர்ணிப்பவர்கள் உண்டு. அந்தளவுக்கு விளம்பரம், மலையாள சீரியல்களில் ஒரு ரவுண்ட் வந்தவர் தற்போது ஹீரோயினியாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
பள்ளி, கல்லுாரி காலங்களில் தடகள வீராங்கணையாக திகழ்ந்தவர் தற்போது திரை நட்சத்திரமாக ஜொலிக்க துவங்கியிருக்கிறார். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் நடிகை ஸ்ரீசுவேதா மகாலட்சுமி.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசினோம்...
சொந்த ஊர் கோவை சிறுமுகை. சிறுமுகையில் பள்ளி படிப்பை முடித்து பட்டப்படிப்புக்கு சென்னைக்கு வந்தோம். சின்ன வயதிலேயே சினிமா பார்க்க பிடிக்கும். நான் மட்டுமின்றி அம்மா, மாமா என குடும்பமே சினிமா பைத்தியம். இதனால் விஷூவல் கம்னியூகேஷன் படிக்க விரும்பினேன். எல்லா குடும்பத்தை போல என் குடும்பத்திலும் சினிமாவிற்கு செல்ல எதிர்ப்பு. பேஷன் காஸ்ட்யூம் டிசைனிங் சேர்ந்தேன். இதுவும் திரைத்துறையுடன் சம்பந்தப்பட்டது. இறுதியாண்டு படித்த போது தோழி ஒருவர் சென்னையில் நடந்த சீரியல் ஆடிஷனுக்கு என் போட்டோவை அனுப்பி விட்டார். அழைப்பு வரும் என நம்பவே இல்லை. வந்த அழைப்பை கண்டு அம்மா ஓ.கே., சொல்லிவிட்டார்.
சென்னை சென்ற பிறகு தான் அது மவுனராகம் என்ற மலையாள சீரியல் என தெரிந்தது. எனக்கு கேரள சாயல் இருப்பதாக கூறி சீரியல் இயக்குனரும் முக்கிய கேரக்டரில் நடிக்க அழைத்தார். வந்த வாய்ப்பை பயன்படுத்திட ஓ.கே., சொல்லி விட்டேன். இந்த சீரியல் கேரளத்தில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் என்னை கொண்டு போய் சேர்த்து விட்டது.
கூடுதலாக பல விளம்பர பட வாய்ப்பையும் பெற்று தந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்து கொண்டே சீரியலிலும் நடித்து வந்த நிலையில் தான், இயக்குனர் பாக்யராஜ் உதவியாளராக இருந்த சுந்தர் இயக்கும் 'அந்த 7 நாட்கள்' படத்தில் ஹீரோயினியாக நடிக்கிறீர்களா என அழைத்தார். அந்த படத்தில் பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிப்பது தெரிந்ததும் ஓ.கே., சொல்லி விட்டேன். விரைவில் ரீலீஸ் ஆக உள்ள அந்த படத்துக்காக வெயிட்டிங். படம் வந்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவேன்.
நடிகர்களில் சூர்யாவின் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். திரிஷா, சமந்தா, அனுஷ்கா என் பேவரைட் ஹீரோயின்கள். நடிகர் சூர்யா அம்மாவும், என் பாட்டியும் பள்ளி தோழிகள். இதனால் நடிகர் கார்த்தி திருமணத்திற்கு எங்கள் குடும்பத்திற்கு அழைப்பு வந்திருந்தது. அப்போது தான் சூர்யாவை பார்த்தேன். அவரது படத்தில் சிறு கேரக்டர்கள் என்றாலும் ஓ.கே., தான்.
பள்ளியில் தடகள வீராங்கனை. கல்லுாரிக்கு வந்த பிறகு பாட்மின்டன் விளையாட துவங்கினேன். பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தற்போது கூட படப்பிடிப்பு முடிந்து வந்து இரண்டரை மணி நேரம் பாட்மின்டன் ஆட சென்று விடுவேன். விளையாட முடியாத நாட்களில் ஜிம் செல்வேன். இதுதான் என் பிட்னஸூக்கு காரணம்.
நாங்கள் சுத்த வெஜிடேரியன். தக்காளி சாதமும், உருளைக்கிழக்கு வறுவலும் ரொம்ப பிடிக்கும்.
சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி பார்த்து இப்படிப்பட்ட படங்களில் நம்மை கூப்பிட மாட்டேங்கிறார்களே என்ற ஆதங்கம் தான் ஏற்பட்டது. அந்த 7 நாட்கள் படம் மூலம் தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இருக்கும் வரைக்கும் நடிக்கணும். இதுதான் என் ஆசை என்றார்.




