எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'வெப் சீரிஸ்' எனும் வலை தொடர்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்களிடம் இடம் பிடித்தவர், மலையாள நடிகர் அஜித்கோஷி. சுழல், இரு துருவம் தொடர்களை தொடர்ந்து, பல்வேறு மொழிகளில் பயணிக்கும் இவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
உங்களை பற்றி?
பிறந்தது கேரளா என்றாலும், வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னை. பக்கா ராயபுரவாசி. சிறுவயதில் இருந்த சினிமா ஆர்வம், 45 வயதுக்கு மேல் சாத்தியப்பட்டது. தற்போது 35 படங்கள், 40 விளம்பரங்கள், ஐந்து வெப் சீரிஸ்கள் என நீண்டு கொண்டிருக்கிறது.
அதிகமாக நடித்தது போலீசாக ஏன்?
எனக்கே தெரியவில்லை. போலீஸ் கதாபாத்திரம், கமிஷனர் கதாபாத்திரம் வேண்டுமென்றால் அஜித் கோஷியை அழைக்கலாம் என்கின்றனர். பலரும் என் பெயரையே 'கமிஷனர் அஜித் கோஷி' என்றுதான், மொபைல் போனில் பதிந்துள்ளனர். அனைத்து கதாபாத்திரங்களையும் மறுக்காமல் செய்து வருகிறேன்.
நடிக்க விரும்பும் பாத்திரம்?
வேட்டியை மடித்து கட்டி, கிராமத்து வேடங்களில் பட்டைய கிளப்ப ஆசை.
உங்களுக்கு திருப்புமுனை?
'சுழல்' இணைய தொடரில் நல்ல பெயர் கிடைத்தது. அதிலிருந்து நிறைய ஹிந்தி தொடர்களில் நடிக்கிறேன்.
ஒரு நடிகராக ரசிகர்களுக்கு நீங்கள் தர விரும்புவது?
பலமான உடல்மொழியும், உருவமுமே என் பலம். போலீஸ் இல்லாத வில்லன் கதாபாத்திரங் களையும் எளிதாக கையாள முடியும். ஒரு நடிகராக அனைத்து கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டும். அதில் முழு திறமையை காட்ட வேண்டும்.
மாற்று மொழியில் நடிக்கும் உணர்வு?
ஒவ்வொரு மொழியிலும், திரையாக்கத்திலும், படம் எடுக்கும் அணுகுமுறையிலும் வித்தியாசம் இருக்கிறது. ஹிந்தியில் 'புரொபசனிலிசம்' இருக்கும். நாம் வரும் முன்னரே, கேரவனில் சீன் பேப்பர் இருக்கும். மலையாள சினிமா அதில் மாறுபட்டது. தமிழ் சினிமா முற்றிலுமாக வேறு மாதிரி. ஒவ்வொன்றுக்கும் ஏற்ப மாற வேண்டும்.
டப்பிங் அனுபவம்?
மலையாளம் என் தாய் மொழி. அதோடு தமிழ், ஹிந்தி மொழியும் தெரியும் என்பதால், என் படங்களுக்கு நானே குரல் கொடுக்கிறேன். குரல் சிறப்பாக இருப்பதால், மற்ற நடிகர்களுக்கும் கேட்கின்றனர். டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லை. உறுப்பினர் ஆனதும் மற்றவர்களுக்கும் குரல் தருவேன்.
சினிமாவில் வருத்தம்?
இருக்கிறது. கிரிக்கெட்டர் மாதிரியே நடிகர்களின் வாழ்க்கையும். ஒரு வீரரின் ஆட்டத்தை டெஸ்ட் மேட்ச் தான் மாற்றும். அதுபோல, நிறைய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது, ஒரு நாள் எனக்கான திரைப்பட வாய்ப்பு கிடைக்கும்.