‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
'டூரீங் டாக்கிஸ்' மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த 'கேரளத்து பைங்கிளி' நடிகை காயத்ரி ரேமா, நடிப்பிலும் நாட்டியத்திலும் ஒருங்கே சாதித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி...
நீங்கள் நாட்டியத்தில் சாதிப்பது எப்படி
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தேன். பள்ளி படிப்பை மும்பையில் முடித்தேன். நான் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. 13 வயதில் அரங்கேற்றம் செய்தேன். சென்னைக்கு கல்லுாரி படிப்பிற்கு வந்ததும் தனஞ்செயனிடம் 6 மாதம் பயிற்சி பெற்றேன். மும்பை, சென்னை, கேரளாவில் பல மேடைகளில் பரதம் ஆடியுள்ளேன்.
திரைத்துறை பயணம் எப்படி ஏற்பட்டது...
சென்னையில் பி.டெக்., படிக்கும் போதே, கல்லுாரியில் இருந்த விஷூவல் கம்யூனிகேஷன் துறைக்கு குறும்படங்கள் தயாரித்து கொடுத்தேன். கல்லுாரி நிகழ்ச்சிக்கு வந்த பல திரைப்பட இயக்குனர்கள் என்னை நடிக்க அழைத்ததற்கு இதுவே காரணம். அப்போது நடந்த 'ஆடிஷனில்' தான் இயக்குனர் எஸ்.ஏ., சந்திரசேகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது 'டூரீங் டாக்கிஸ்' படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
இது வரை வெளியான படங்கள் எத்தனை
இது வரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அதில் 15 படங்கள் ரிலீஸ் ஆனது. நான் நடிக்க உறுதுணையாக மாஸ்டர் மணி, நடிகர் ரஞ்சித் இருந்தனர். எனக்கு அதிகம் பிடித்தவர் சித்தார்த். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் எனக்கு பின்னணி பாடகர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' வாய்ப்பு கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன். அனைத்து இயக்குனரிடமும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. குறிப்பாக தமிழ் திரைப்பட இயக்குனர் சசி, கேரளா இயக்குனர் பேஸில் ஜோசப் போன்றவர்கள் படத்தில் நடிக்க ஆர்வம் அதிகம். நான் தெலுங்கு உட்பட 6 மொழிகளில் 'டப்பிங்' கொடுக்கிறேன்.
பெற்ற விருதுகள்...
2018 ல் 'குறும்படத்திற்கு' விருது, 'சைமா' விருதுகளை பெற்றுள்ளேன். சிவகங்கை நகராட்சி தலைவர் சி.எம். துரைஆனந்த் தயாரிப்பில் வெளியாக உள்ள 'விழித்தெழு' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். சமூக வலைதளத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக்கேட்டு, தடுக்கும் கேரக்டரை செய்துள்ளேன். மாற்றுத்திறனாளி, கண் பாதித்தவர், இரட்டை வேடங்கள் என நடிக்க ஆசை.
நீங்கள் பூனைகள் வளர்க்கிறீர்களாமே...
வீட்டில் ஆசையாக பூனைகள் வளர்த்தேன். அவை நன்கு வளர்ந்து 50 குட்டிகள் வரை போட்டது. வீட்டில் அதிகளவில் வளர்த்ததால், சென்னையில் வீட்டு உரிமையாளரின் எதிர்ப்பை சந்தித்தோம். என்றாலும் பூனை பாசம் போகவில்லை.
இவரை பாராட்ட gayatri.rema@gmail.com