ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கிய ஜாக்குலின் மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்தார். 'கனா காணும் காலங்கள்', 'ஆண்டாள் அழகர்' ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்திருந்த ஜாக்குலின் 'தேன்மொழி பி.ஏ' என்ற தொடரில் நாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே இந்த சீரியலுக்கான சரியான ஸ்லாட் கிடைக்காததால் வெவ்வேறு நேரங்களில் மாற்றி மாற்றி ஒளிபரப்பட்டது. மேலும், கொரோனாவின் போது ஷுட்டிங் நடைபெறாததால் சீரியல் ஒளிபரப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு சமீபத்தில் தான் மீண்டும் தொடங்கியுள்ளது. இது போன்ற சில சிக்கல்களின் காரணமாக சீரியலை முடித்துவிடலாம் என தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப கதைக்களம் மாற்றியமைக்கப்பட்டு 'தேன்மொழி பி.ஏ'முடிவை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை ஜாக்குலினே தெரிவித்துள்ளார்.




