5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தொலைக்காட்சிகளுக்கு இடையே நடக்கும் டிஆர்பி போட்டியில் புதுப்புது சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் ஒளிபரப்பும் நிகழ்ச்சி தான் சர்வைவர். ஆக்ஷன் கிங் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதில் ஒருவராக விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டுள்ளார்.
இளைஞர்களின் புது கிரஷாக மாறியுள்ள ஐஸ்வர்யா தனக்கு சர்வைவர் வாய்ப்பு கிடைத்தது குறித்து ஒரு பேட்டியில் முன்னதாக தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர், 'பிட்னஸ் டிரெய்னர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இன்ஸ்டாவில் சில ஸ்டண்ட் வீடியோக்களை அப்லோட் செய்திருந்தேன். என்னுடைய அந்த ஸ்டண்ட் வீடியோக்களை பார்த்த ஜீ தமிழ் நிர்வாகம் என்னை அழைத்து சர்வைவர் ஷோவில் கலந்து கொள்ள சொன்னார்கள். அதன் பின் நேரடியாக இண்டர்வியூ நடந்தது. இப்படி தான் எனக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என கூறியுள்ளார்.