கடவுள் பூமிக்கு வந்தால்… : சிம்புவின் 51வது பட அறிவிப்பு வெளியானது | லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் | தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்: பார்வதி நாயருக்கு விரைவில் 'டும்.. டும்.. டும்..' | பிரியங்கா சோப்ரா இல்லாமல் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பை துவங்கிய ராஜமவுலி | கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது | லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக்: சவுராஷ்டிர மொழி சொற்கள் இடம்பெற்ற ஒரே தமிழ் திரையிசைப் பாடல் | இளையராஜா முன் அவரது பாடல்களுக்கு நடனமாடி வசீகரித்த ரஷ்ய கலைஞர்கள் | நடிகராக 50வது படம், தயாரிப்பாளராக மாறிய சிம்பு |
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டான பல சீரியல்களில் ஆபிஸ் சீரியலும் ஒன்று. ஐடி கம்பெனிகளில் நடக்கும் கதையாக உருவான இந்த சீரியலுக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக இருந்தனர், குறிப்பாக ஐடி ஊழியர்கள். இந்த தொடரில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகை மதுமிளா.
இலங்கையைச் சேர்ந்த மதுமிளா மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பின் ஆபிஸ் சீரியல் வாய்ப்பு வந்து அதில் நடித்து வந்த போது அந்த தொடரின் கதநாயாகியை விட அதிக ரசிகர்களை பெற்றிருந்தார். தொடர்ந்து சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூஜை, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின் திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்ட மதுமிளா நடிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டார்.
மதுமிளாவுக்கு தற்போது ஒரு வயதில் அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிம்மதியாக வசித்து வருகிறார். இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் மதுமிளாவிற்கு அவரது ரசிகர்களும் தொடர்ந்து சப்போர்ட்டாக இருந்து வருகின்றனர்.