லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் | தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்: பார்வதி நாயருக்கு விரைவில் 'டும்.. டும்.. டும்..' | பிரியங்கா சோப்ரா இல்லாமல் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பை துவங்கிய ராஜமவுலி | கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது | லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக்: சவுராஷ்டிர மொழி சொற்கள் இடம்பெற்ற ஒரே தமிழ் திரையிசைப் பாடல் | இளையராஜா முன் அவரது பாடல்களுக்கு நடனமாடி வசீகரித்த ரஷ்ய கலைஞர்கள் | நடிகராக 50வது படம், தயாரிப்பாளராக மாறிய சிம்பு | சங்கராந்திகி வஸ்துனம் - ஒரே மொழியில் வெளியாகி 300 கோடி வசூல் |
சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து இரண்டு எபிசோடுகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் விஜே பார்வதி. ஜி தமிழ் டிவியின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சர்வைவர் ரியாலிட்டி ஷோ கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து இதுவரை இரண்டு எபிசோடுகளை கடந்துள்ளது.
இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான விஜே பார்வதியின் செயல்கள் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் மரம் வெட்ட சென்ற இடத்தில் அம்ஜத்துடன் சண்டையிட்டடார். ஸ்ருஷ்டி டாங்கேவை பார்த்து கேமரா வரும்போது மட்டும் நீங்க வேலை செய்றீங்களா? என்று வம்பிழுத்தார். ஒரு சமயத்தில் பார்வதி கீழே விழ நான் கீழே விழும்போது சிரிப்பீங்களா என்று மீண்டும் ஸ்ருஷ்டி டாங்கேவிடம் பஞ்சாயத்தை கூட்டினார். தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கிலும் தைரியசாலியாக மட்டும் இருந்தால் போதாது தலைவராக இருக்க ஒரு அணியை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என திடீர் தீடீரென ட்விஸ்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜே பார்வதியை விமர்சித்து வருகின்றனர். மேலும் சர்வைவர் டீமில் பார்வதி தான் அடுத்த வனிதா என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.