அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
பிக்பாஸ் பாணியில் ஜி தமிழில் வெளியான கமல் புரோமோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பிக்பாஸ் சீசன் 5-க்கான அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் பிக்பாஸின் இரண்டாவது புரோமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கும் வகையில் ஜி தமிழும் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறது. இந்நிலையில் பிக்பாஸ் பாணியில், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் தீம் மியூசிக்குடன் ஆரம்பிக்கலாமா? என கமல் கேட்கும் புதிய புரோமோவை ஜி தமிழ் வெளியிட்டுள்ளது. அதில், நிகழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடாமல் "விரைவில்" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பார்க்கும் ரசிகர்கள் பிக்பாஸ் ஜி தமிழுக்கு மாறுகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.