டிவி தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரீதேவி. சில படங்களிலும் தோன்றியுள்ளார். அசோக் சிந்தாலா என்பவரை திருமணம் ஸ்ரீ தேவி செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையாக பிறந்தால் அதற்கு எஸ் என தொடங்கும் பெயரை வைக்கப் போவதாக இருவரும் அறிவித்திருந்தனர். குழந்தையின் பெயர் சூட்டு விழாவும் சமீபத்தில் விமர்சையாக நடைபெற்றது. அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ஸ்ரீதேவி குழந்தையின் பெயர் சித்தாரா சிந்தாலா என ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். குழந்தை சித்தாராவின் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து வைரலானது.