லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜோடியாக நடித்து வரும் சரவண விக்ரம் - ஐஸ்வர்யா நிஜத்திலும் காதலர்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது அந்த கேள்விக்கு இருவரும் ஜோடியாக சேர்ந்தே விளக்கமளித்துள்ளனர்.
இப்போதெல்லாம் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் நிஜ வாழ்விலும் கல்யாணம் செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர் தொடரில் கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரமும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக 'நீங்கள் நிஜத்திலும் காதல் ஜோடியாக ஆகிவிட்டீர்களா'? என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சரவண விக்ரம், தீபிகா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் லைவ்வில் 'நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான். இந்த கேள்வியை தான் எல்லோரும் கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்லி சொல்லி எங்களுக்கே கஷ்டமாக இருக்கிறது'என கூறினர்.