விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் சமீபத்தில் வெளியேறினார். அதன் ப்ரொமோ இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து வனிதா விஜயகுமார் விளக்கமளித்துள்ளார்.
யூ-டியூப் நேரலையில் பேசிய வனிதா, விஜய் டிவியில் எனக்கு சொல்லப்பட்ட ஷோ விவரம் ஒன்று, ஆனால் அதே நேரத்தில் அங்கு நடந்தது வேறு. டான்சராக இருந்து, ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வாகி பங்கேற்கும் டான்ஸ் ஷோக்கள் வேறு. ஆனால், இது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி, போட்டி இல்லை, எண்டர்டெய்ன்மென்ட்டுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
கலக்கபோவது யாரு ஷோவில் நடுவராக வந்த நான் மீண்டும் போட்டியாளராக வர விரும்பவில்லை என சொன்னேன். அவர்கள் என்னை சமாதானப்படுத்தி பங்கேற்க வைத்தார்கள். ஆனால் அங்கு விஷயம் கொஞ்சம் சீரியஸாக மாறி விட்டது. அமெரிக்கன் ஐடல் ஷோ மாதிரி பேசினார்கள். ஒப்பீடு செய்யக்கூடாது என நான் ஏன் சொன்னேன் என்றால், இருவரும் சமமாக இருந்தால் ஒப்பிடலாம். விஜய்யிடம் போய் அஜித் உன்னை விட இந்த ரோலில் நன்றாக நடித்து இருப்பார் என சொல்ல முடியுமா?. அங்கு நடந்தது கன்ஸ்ட்ரக்டிவ் க்ரிட்டிசிஸம் என பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை விமர்சித்துள்ளார்.