பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

விஜய் டிவியில் குழந்தைகளுக்கான புதிய ரியாலிட்டி ஷோவாக தெறி பேபி ஒளிப்பரப்பாக உள்ளது. இதை வீஜே ரக்ஷ்னுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு அடுத்தபடியாக ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதிலும் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வருகிறது.
ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றிக்கு அதை தொகுத்து வழங்கும் வீஜேக்களின் பங்கு முக்கியமானது. சிவ கார்த்திகேயன், டிடி, தீபக், ரம்யா தொடங்கி பலர் தாங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
அந்த வகையில் திருமணத்துக்கு பின் வீஜே வேலைக்கு ஓய்வு கொடுத்த மணிமேகலை, மீண்டும் வீஜே ஆகுமாறு அவர்கள் ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். அவரும் மீண்டும் வீஜே ஆகும் விருப்பத்தையும், ரக்ஷனுடன் இணைந்து பணிபுரியும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது விருப்பத்திற்கு செவி சாய்த்துள்ள டிவி நிர்வாகம் இந்த கலாட்டாவான காம்போவினை குழந்தைகள் ஷோவில் களமிறக்கியுள்ளது. குழந்தைகளின் சுட்டித் தனத்துடன் தெறிக்க விட வருகிறது இந்த புதிய காம்போ.