ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
பிக்பாஸ் ஜோடிகளுக்கான நடன நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியின் இந்த வார புரோமோ வீடியோவில், வனிதாவின் நடனத்தை பார்த்து போட்டியின் நடுவர்களான ரம்யா கிருஷ்ணனும், நகுலும் சில விமர்சனங்களை கூறுகின்றனர். அதைக் கேட்டு ஆத்திரமடையும் வனிதா தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிக்க வேண்டாம் என்று கூறுகிறார். இதனால் நடுவர்களுக்கும் வனிதாவுக்குமிடையே பிரச்னை எழுகிறது.
புரோமோவின் இறுதியில் வனிதா பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக கூறிவிட்டு வனிதா மேடையை விட்டு இறங்கி செல்கிறார். ரம்யா கிருஷ்ணன் அவரை கோபத்துடன் பார்க்கிறார். உண்மையில் வனிதாவுக்கும் நடுவர்களுக்குமிடையே என்ன நடந்தது என்பதை வரும் 25 ஆம் தேதி ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியை பார்த்தால் தெரிய வரும்.