'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் இதுவரை சந்தியாவுக்கு ஆதரவாக இருந்த அவரது கணவர் சரவணன், தற்போது சந்தியாவை வெறுத்து ஒதுக்க தொடங்கிவுள்ளார்.
சரவணன் தன்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரியாத சந்தியா கடைக்கு சென்று அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், சந்தியாவை கடைசி வரை கண்டுகொள்ளாத சரவணன் கஸ்டமர்களை கவனிக்கிறார். அப்போது கடைக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்த நண்பர் படித்த பெண்ண திருமணம் செய்தால் பிரச்னை. நம்மை மதிக்கமாட்டார்கள். அதனால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்று கூற அதை சரவணனும் ஒத்துக்கொள்கிறார். இதைக்கேட்ட சந்தியா அதிர்ச்சியுடன் வீடு திரும்புகிறார்.
அதன்பின் வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியாவையும் இனிமேல் சாப்பாட்டு கொண்டு வர வேண்டாம் என்று சொல்கிறார். இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கு காரணம் புரியாமல் தவிக்கும் சந்தியா, சரவணனை எப்படி சமாதான செய்யப் போகிறார் என்ற கேள்வியுடன் இன்றைய எபிசோடு தொடர்கிறது.