நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு சமையல் நிகழ்ச்சியை காமெடியுடன் கலந்து தயாரிக்கும் நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் புதிதாக தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி பொங்குறோம் திங்கிறோம்.
இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. மலேசிய உணவுகளை இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கிரேஸ் கருணாஸ் மற்றும் சமையல் கலை நிபுணர் வினோத்குமார் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.
அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம்சிவா, சாய், ரஞ்சித், இந்திரஜா ரோபோசங்கர், சாய், போட்டியாளர்களாக பங்குபெறுகின்றனர். முதல்கட்டமாக மலேசிய சேனல்களில் இது ஒளிப்பரப்பாகிறது.