விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகியுள்ள நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளாராக பணியாற்றிய ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் விரைவில் இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகிறது.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரிக்கை பிரிந்துவிட்ட கிரிஸில்டா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வந்தார். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், ரங்கராஜன் தன் முதல் மனைவி ஸ்ருதிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த காதலர் தினத்தன்று இதை உறுதி செய்யும் வகையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில் காதலர் தினத்தன்று வெளியிட்ட பதிவில், 'காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜனுடன் கொண்டாடினேன். அவர் எனக்கு பூ வாங்கி தந்தார்' என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரங்கராஜூடன் எடுத்துகொண்ட பல புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனால், இருவரது உறவும் உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.