அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் அருந்ததி கதையின் நாயகி யார் தெரியுமா? | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு | நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா |
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பல நடிகர்கள் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமான நபர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா. தற்போது சின்னத்திரையிலும், சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் உதயா கடந்த சில நாட்களுக்கு முன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நோய் தீவிரத்தின் காரணமாக இடது காலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டனர்.
தற்போது தொடர்ந்து மருத்துவ சிகிச்சை செய்வதற்கும், அன்றாட செலவுகளுக்கும் மிகவும் கஷ்டப்பட்டு வரும் உதயாவிற்கு சக நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் டைகர் கார்டன் தங்கத்துரை உதயாவை நேரில் சந்தித்து பொருளுதவி செய்துள்ளார். அதுபோல கேபிஒய் பாலாவும் உதயாவை நேரில் சந்தித்து பணம் தந்து உதவியிருக்கிறார்.