ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருடந்தோறும் வரும் ஐபிஎல் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக இருப்பது போல், சின்னத்திரை ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான விமர்சனங்கள் தாண்டி போட்டியாளர்களின் கேம் விளையாடுவதை கூட திறனாய்வு செய்து பலர் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்த சீசனில் விளையாடி வரும் ஜாக்குலின் சிறப்பான ரெக்கார்ட் ஒன்றை செய்துள்ளார். அதாவது, முந்தைய சீசன்களில் மிக அதிக முறை எலிமினஷனுக்கு நாமினேட் ஆகி தொடர்ந்து விளையாடிவர் பாவ்னி ரெட்டி தான். பாவ்னி ரெட்டி 12 முறை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டு தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்தார். தற்போது ஜாக்குலின் 13 முறை நாமினேட் ஆகி பாவ்னி ரெட்டியின் சாதனையை முறியடித்திருக்கிறார். இதனையடுத்து ஜாக்குலினின் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.