'புஷ்பா 2' பாடலுக்காக ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | என்னை நம்பி கடவுள் ஒரு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார் : மகன் பற்றி பிரியாராமன் கண்ணீர் பேட்டி | 'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள் | எரிந்து போன முதல் படம், நடன நடிகை, தமிழ் நாட்டின் முதல்வர்: வி.என்.ஜானகி நூற்றாண்டு | பிளாஷ்பேக் : அமிதாப் பச்சனை மிஞ்சிய சிவாஜி | அனைத்து தடைகளும் நீங்கி வெளியானது கங்குவா : ரசிகர்கள் உற்சாகம் | பிக்பாஸ் வருவதற்கு டாக்டரிடம் பரிந்துரை செய்தேன்- அன்ஷிதா | புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு |
ஊடகவியலாளர், சின்னத்திரை நடிகர், பிக்பாஸ் போட்டியாளார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் என பல்வேறு பட்டங்களை சுமந்து வரும் விக்ரமனுக்கு அண்மையில் திருமணம் முடிந்தது. அதற்கு முன்னால் இவர் மீது பாலியல் சுரண்டல் தொடர்பாக புகார் எழுந்தது. ஆனாலும், கட்சி தரப்பிலோ, சமூகநீதி காவலர்களோ இவர் மீது எந்த வித விமர்சனத்தையோ நடவடிக்கையோ வைக்கவில்லை.
இந்நிலையில் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை விக்ரமன் ஹிந்து திருமண முறைப்படி தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஈவெரா, அம்பேத்கர் என பேசி ஹிந்து சடங்கு சம்பிரதாயங்களை கிண்டலடித்துவிட்டு தன் வீட்டு திருமணத்தில் மட்டும் சமூகநீதி போராளிகள் தாலிக்கட்டி கொள்கிறார்கள்' என விமர்சனம் எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள விக்ரமன், 'இது என் மனைவியின் ஆசை. கூட இருப்பவர்களுக்காக சில விஷயங்களை நாம் மதிக்க வேண்டும். அது தான் பகுத்தறிவு' என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து 'ஊரான் வீட்டுக்கு மட்டும் உபதேசம் செய்வது தான் பகுத்தறிவா?' என அதையும் மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.