இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் தற்போது பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விகாஸ் சம்பத் நடித்து வருகிறார். சீரியலில் ஜோடியாக திரியும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், திவ்யா கணேஷ் இது முற்றிலும் பொய்யான செய்தி என்று கூறியதோடு, 'எங்கள் இருவருக்கும் குடும்பங்கள் இருக்கிறது. எங்கள் குடும்பங்களை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறான பொய் செய்திகளை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். எனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் பேசாதீர்கள். அதை நான் மறக்கவே நினைக்கிறேன். இதை எனது வேண்டுகோளாக நினைத்து ரீச்சிற்காகவும், வியூஸ்காகவும் இது போன்ற போலியான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்' என வேண்டுகோள் வைத்துள்ளார்.