இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷிற்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால், அவர் நடிக்கும் எந்த சீரியலிலும் முழுவதுமாக நடித்துக் கொடுக்காமல் பாதியிலேயே ஏதோ சில காரணங்களால் வெளியேறி விடுகிறார் என ரசிகர்கள் வருந்தி வருகின்றனர். இந்நிலையில், மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்த திவ்யா கணேஷ், அந்த சீரியலை விட்டும் சில தினங்களுக்கு முன் விலகிவிட்டார். இதுகுறித்து பலரும் கேள்விகள் கேட்க, இன்ஸ்டாகிராமில் தற்போது திவ்யா கணேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர், 'நான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் மகாநதி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சீரியல் குழுவினர் எனக்கு பதிலாக வேறு நடிகையை தேடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி' என கூறியுள்ளார்.