மக்கள் மனதில் இடம்பிடித்த பாக்கியலெட்சுமி தொடர் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் கடந்த வருடமே சீரியலை விட்டு விலகுவதாக பதிவிட்டிருந்தார். ஆனால், ரசிகர்களோ பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷ் தொடர்ந்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். இதனையடுத்து சீரியலை விட்டு விலகும் முடிவிலிருந்து பின்வாங்கிய சதீஷ், தற்போது மீண்டும் பாக்கியலெட்சுமி தொடரை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாக்கியலெட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் வந்துவிட்டது' என்ற கேப்ஷனுடன் 'ஒரு பொய்யை முத்தமிடுவதை விட உண்மையிடம் அரை வாங்கிக் கொள்ளலாம்' என குறிப்பிட்டுள்ளார்.